பட்டுப்போன மரத்தை அகற்ற வலியுறுத்தல்
மல்லசமுத்திரத்தில் பட்டுப்போன புளிய மரத்தை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டுப்போன புளியமரத்தை அகற்ற மக்கள் கோரிக்கை; மல்லசமுத்திரம் பாலிக்காட்டில் பட்டுப்போன புளியமரத்தை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட, தி.கோடு– சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலிக்காடு பால்சொசைட்டி எதிரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளியமரம் தற்சமயம் முற்றிலுமாக பட்டுப்போய் உயிரில்லாத நிலையில் உள்ளது. இதனால், மழைக்காற்றுக்கு எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழுந்து விபத்து நேரிடலாம்.
இங்கு வருகின்ற மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர். எனவே, இந்த மரத்தை நிரந்தரமாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கும், தாசில்தாருக்கும், செயல்அலுவலருக்கும் கடிதம் மூலமாக மனுஅனுப்பியுள்ளனர். எனவே, விபத்து நேரும் முன்னரே மரத்தை அகற்றினால், பெரும்சேதம் தவிர்க்கப்படும்.