தாழ்வாக செல்லும் மின் ஒயர் சீரமைக்க வலியுறுத்தல்

தாழ்வாக செல்லும் மின் ஒயர் சீரமைக்க வலியுறுத்தல்

தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டை பிரதான சாலையோரம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்வழித்தட பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், சாலை வளைவு பகுதியில் இரு மின்கம்பங்களுக்கு இடையே மின் ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால், கனரக வாகனங்கள் எதிரெதிரே இச்சாலையில் செல்லும்போதோ, வைக்கோல் ஏற்றிச்செல்லும் கனரக லாரிகள் மின் ஒயரில் உரசி மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story