பொதுபயன்பாட்டிற்கு தண்ணீா் தொட்டி அமைத்து தர வலியுறுத்தல்.
நகராட்சி அலுவலகம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாயிடம் கூசாலிப்பட்டி பகுதி பொதுமக்கள் சாா்பில் முருகன் திங்கள்கிழமை அளித்த மனுவின் விவரம்: கூசாலிப்பட்டியில் இந்து மறவா், விஸ்வகா்மா, குலாளா், யாதவா், சலவை தொழிலாளா்கள், அருந்ததியா்கள் என சமுதாய மக்கள் வசித்து வருகின்றனா்.
இச்சமுதாய மக்களுக்கு பொது பயன்பாட்டிற்கு தண்ணீா் தொட்டி இல்லை. எனவே இப்பகுதியில் இறுதிச் சடங்கு உள்ளிட்ட பொது பயன்பாட்டிற்கு தண்ணீா் தொட்டி அமைக்க வேண்டும். பணிக்கா் குளம் பகுதி பொதுமக்கள் அளித்த மனு: பணிக்கா்குளத்தில் பொதுக் காரியங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இடத்திற்கு வருவாய் துறை சாா்பில் வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்து பொதுக் காரியத்திற்கு பயன்படுத்த கிராம ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். ந
கா்மன்ற உறுப்பினா் விஜயகுமாா் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் செண்பகவல்லி அம்மன் கோவில் சந்திப்பு அருகே பாலம் அருகே உள்ள இடத்திலிருந்து மாதாங்கோவில் தெரு வரை உள்ள சாலைகளின் இருபுறமும் வாருகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.