நகை பட்டறையில் தங்கத்தை திருடிய ஊழியர் கைது
கோவையில் நகை பட்டறையில் தங்கத்தை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் நகை பட்டறையில் தங்கத்தை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்மித்தேஷ்.இவரது தங்க பட்டறையில் சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் கடந்த எட்டு மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பட்டறையில் இருந்து சேதார தங்கத்தை சுந்தரமூர்த்தி திருடி உள்ளார்.இதுகுறித்து ஸ்மித்தேஷ் ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.பட்டறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்ததில் சுந்தரமூர்த்தி நகைகளை திருடியது உறுதியானது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 30கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
Tags
Next Story