கடமான் தாக்கி ஊழியர் சாவு

கடமான் தாக்கி ஊழியர் சாவு

:குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கடமான் தாக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து 2-வது நாளாக வன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


:குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கடமான் தாக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து 2-வது நாளாக வன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்லை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 25). குரும்பப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவர்கள் 2 பேரும் சேலம் அருகே உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் தற்காலிக விலங்கு பாதுகாவலராக பணியில் இருந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் அங்கு உள்ள வன விலங்குகளுக்கு உணவு வழங்கினர். பின்னர் கடமான்களுக்கு உணவு வழங்க சென்றனர். அதன்படி கோதுமை மாவை அங்கு உள்ள தொட்டியில் தமிழ்ச்செல்வன் கொட்டினார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த கடமான் ஒன்று திடீரென்று பாய்ந்து தமிழ்ச்செல்வனை முட்டியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதை தடுக்க வந்த முருகேசனையும் கடமான் முட்டியது. இதில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். வன அதிகாரிகள் விசாரணை இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் காஷியப் ஷஷாங் ரவி, பூங்கா உதவி இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.

அப்போது ஆண் கடமான் ஆக்ரோஷமாக தாக்க காரணம் என்ன? என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது பூங்காவில் 30 பெண் கடமான்கள் உள்பட 37 கடமான்கள் இருப்பதும், ஊழியரை தாக்கியது ஆண் கடமான் என்பதும் தெரிந்தது. தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் பூங்காவில் உள்ள கடமான்களின் உடல்நிலைகள் குறித்து பரிசோதனை நடத்தினர். இதனால் நேற்று பூங்காவிற்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. தொடர்ந்து வன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story