10 ரூபாய் நாணயம் வாங்காம மறுக்கும் ஊழியர்கள்

X
10 ரூபாய் நாணயம் வாங்காம மறுக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு.
10 ரூபாய் நாணயங்களை வாங்காம மறுக்கும் ஊழியர்கள் நடவடிக்கை எடுக்ககோரி மனு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சமூக ஆர்வலர் ஈ.பி.சரவணன் 10 ரூபாய் நாணயங்களுடன் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகிறார்கள். குறிப்பாக பெட்டி கடைகள் முதல் பல்வேறு அங்காடிகள் வரை இதனை வாங்க மறுக்கிறார்கள். 10 ரூபாய் நாணயம் தொடர்பாக ரிசர்வ் வங்கி பலமுறை விளக்கம் அளித்தும் நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள். இதனால் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற மனநிலையே பொதுமக்களிடம் ஏற்படுகிறது. எனவே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள், நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags
Next Story
