தொழில் தொடங்க வாருங்கள் ; தோல் கொடுக்க நாங்கள் !!

தொழில் தொடங்க வாருங்கள் ; தோல் கொடுக்க நாங்கள் !!

வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

மாண்புமிகு டி. எம். அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர், சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, EDII TN தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், EDII அகமதாபாத்துடன் இணைந்து “தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் “ என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளது. EDII அகமதாபாத் பாடத்திட்டத்தை தீர்மானிக்கும், பாடத்தின் ஒரு பகுதி அவர்களின் பேராசிரியர்களால் நேரடியாக நடத்தப்படும். இதற்கான வகுப்புகள் வரும் அக்டோபர் 14, 2024 அன்று தொடங்கும். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மற்றும் நேர்காணல்கள் செப்டம்பர் 2024 கடைசி வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ. 80,000 கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. இதில் சேர தகுதி நிபந்தனைகள் வயது 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் பட்டதாரிகள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.இந்த பாடநெறி ஒரு தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். வேலைவாய்ப்புக்கான படிப்பு அல்ல. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்முனைவோராக மாற முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். பயிற்சி முழுவதும் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளில் மிக உயர்ந்த தரத்திற்கு நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் அவர்களை தொடர்பு கொள்ளவும். மற்றும் 8668107552 மற்றும் 8668101638 எண்களை தொடர்பு கொள்ளவும். அனைத்து விவரங்களையும் இந்த https://youtube.com/shorts/GBnEEtTQiuI?feature=share இணைய தளத்தில் காணலாம்.


Tags

Next Story