தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்....

தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்....

வேலைவாய்ப்பு முகாம்

தமிழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் விவேகம் கல்வி நிறுவனத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு வரும் கல்வி ஆண்டிற்குத் தமிழ் முதுகலைப்பட்டதாரி மற்றும் தமிழ்ப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்றது.

தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா் வி.திருவள்ளுவன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இதில் விவேகம் கல்வி நிறுவனத்தின் தாளாளர் முனைவர் கு.பூபதி மற்றும் அந்நிறுவன தமிழ் ஆசிரியர் கோவிந்தராஜ் பங்கேற்றனர். ஒருங்கிணைத்த மொழிப்புலத் தலைவரும், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளியின் துறைத்தலைவருமாகிய ச.கவிதா வரவேற்று நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

வேலைவாய்ப்பு முகாமில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பணிவாய்ப்பினைப் பெற்றார்கள்.

விவேகம் கல்வி நிறுவனத்திற்குத் தேவையான தமிழாசிரியர்களை பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி தேவையான ஆசிரியர்களை தேர்வு செய்வதாக உறுதியளித்தனர். இந்நிகழ்வின் நிறைவாக தமிழ்ப்பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மைய இயக்குநர் மற்றும் கூர்நோக்காளர் சங்கீதா நன்றி கூறினார்.

Tags

Next Story