செஞ்சி கே.எஸ்.ராஜா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

செஞ்சி கே.எஸ்.ராஜா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம் 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தனியார் கல்லூரியில் நடைப்பெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 300க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த செல்லபிராட்டியில் உள்ள கே.எஸ்.ராஜா மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதற்கு கல்லூரி செயலாளர் முனைவர் பாக்யஸ்ரீ தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர் சுசீந்திரன், இயக்குனர் டாக்டர் லோகஸ்ரீ, நிர்வாக இயக்குனர் டாக்டர் நித்யஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எச்.டி.பி. பைனான்ஸ், வேலன் நிறுவனம், சி.ஐ.இ.எல். நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தகுதியான மாணவிகளை தேர்வு செய்தனர்.

இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் பயிற்சி அலுவலர் பவித்ரா மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story