கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாமை துவக்கிவைத்த ஆட்சியர் 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம் வேலூரில் நடந்தது.

வேலூர் மாவட்ட நிர்வாகம் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. குடியாத்தத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவே ல்பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினைதொடங்கி வைத்தார். இந்த முகாமில் பல்வேறு நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலுவிஐயன், கே வி குப்பம் ஒன்றிய பெருந்தலைவர் ரவிச்சந்திரன் ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம். நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் ஒன்றிய குழு உறுப்பினர் சீதாராமன் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ,ஆணையர் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story