பாவை கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு தின விழா!

பாவை கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு தின விழா!

 வேலைவாய்ப்பு தின விழா

பாவைக் கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு தினவிழா நடைபெற்றது. விழா இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. விழாவிற்கு பாவைக் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் அவர்கள் தலைமை வகித்து, தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பெங்கர், ஓலா எலக்ட்ரிக் மொபிலிடி நிறுவனத்தின் இயக்குநர் ஜெயராமன் ஞானவடிவேல் அவர்கள் கலந்து கொண்டார். இறுதியாண்டு மின் மற்றும் தொடர்பு பொறியியல் துறை மாணவி செல்வி வி.சன்மதி வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் ஜெயராமன் ஞானவடிவேல் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தம் உரையில்ரூபவ் ‘மாணவர்களை தலைவர்களாக உருவாக்கும் சிறந்த கல்வி நிறுவனமான பாவை கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவச் செல்வங்களாகிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நமது இந்தியாவில் மனித வளம் என்பது தேசத்தின் மிகப்பெரிய சக்தியாகும். எனவே கல்லூரிக் கல்வி முடித்துரூபவ் தொழில் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் தயாரிப்புகள்ரூபவ் வாடிக்கையாளர்கள்ரூபவ் நோக்கம், புரிந்துணர்வு கொண்டுள்ள நிறுவனங்கள் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனோடு நிறுவனத்தில் எனது பணி என்ன நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எப்படி என்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பகுத்தறிய வேண்டும். மேலும் அங்கு பணிபுரியும் அலுவலர்கள், அவர்களின் துறைரூபவ் படிப்பு, அனுபவங்கள் போன்றவற்றை அறிந்து, உங்களை வளர்த்துக் கொண்டு குழு மனப்பான்மையுடன் செயலாற்றிரூபவ் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். மேலும் உங்கள் உயர் அதிகாரிகளிடம் மதிப்புடன் நடந்து, ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். அதனோடு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப உங்கள் அறிவு மற்றும் திறமைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். இவைகளை நீங்கள் பின்பற்றும் போது, உங்கள் நிறுவனத்தின் அடையாளமாகரூபவ் உங்களால் திகழ முடியும். இவைகள் மட்டுமின்றி அடுத்த ௧௦ வருடங்களில் எந்த துறை மேலோங்கி நிற்கும் என்பவைகளை ஆராய்ந்துரூபவ் அவற்றிற்கேற்றாற் போல் உங்கள் துறை சார்;ந்த அறிவினை வளர்த்துக் கொண்டால்ரூபவ் உங்கள் தொழில் முன்னேற்றப் பாதையின் அடுத்தடுத்த நிலைக்கு உங்களால் முன்னேற முடியும். நீங்கள் எந்த செயலை செய்தாலும்ரூபவ் அதில் உங்களின் சிறந்த பங்களிப்பை செலுத்துங்கள். ஏன், எதற்கு, எப்படி என்று அனைத்து செயல்களையும் ஆராய்ந்து கவனியுங்கள். சிறந்த பலம், செயலாக்கம் மற்றும் உத்வேகத்துடன் துடிப்புடன் செயல்படுங்கள். இறுதியாக குடும்பம், உறவு, நட்பு போன்றவைகளின் மதிப்பினை உணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் அனைவரும் வாழ்வில் உயர உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்று பேசினார். பின்னர் பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் திருமதி.மங்கைநடராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு மற்றும் பொன்னாடை வழங்கினார். அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மற்றும் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆகியோர் டெக்மஹேந்திரா, இன்போசிஸ், ஹெச், சி.எல், விப்ரோ, சிடிஎஸ், டிசிஎஸ் மற்றும் பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 3244 மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். 92.64 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்புகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. நிறைவாக உயிரியல் மருத்துவ பொறியியல் இறுதியாண்டு மாணவன் செல்வன் வி.ரோஷன்குமார் நன்றி நவிழ நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது. இவ்விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (நிர்வாகம்) முனைவர் கே.கே.இராமசாமி, வேலைவாய்ப்பு மைய அலுவலர் ஆர்.தாமரை செல்வன், நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர் எம்.மோகன், அனைத்து கல்லூரி முதல்வர்கள்ரூபவ் முதன்மையர்கள்ரூபவ் துறைத்தலைவர்கள்ரூபவ் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story