சாத்தான்குளத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - அமைச்சர் அறிவிப்பு..!

சாத்தான்குளத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - அமைச்சர் அறிவிப்பு..!

வேலைவாய்ப்பு பெரும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் 

சாத்தான்குளம், பகுதியில் 25 ஆயிரம் பேர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார்.

சாத்தான்குளம் பகுதியில் கனமழையால் சேதமான பகுதிகளில் அமைச்சா் சி.வி. கணேசன் ஆய்வு மேற்கொண்டாா். சுப்பராயபுரத்தில் உள்ள தடுப்பணையில் சேதமான பாலம், முதலூா் ஊராட்சிக்குள்பட்ட சொக்கலிங்கபுரம் அருகே சேதமான கருமேனி ஆற்றுப் பாலம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

அப்போது அங்குள்ள மக்கள் உயா் மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தினா். ஏற்பாடு செய்வதாக அமைச்சா் உறுதி அளித்தாா். பின்னா் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட ராமசாமிபுரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டாா். அப்போது அங்குள்ள மக்கள், கருமேனி ஆற்றுப்பாலம் அருகே பேருந்து நிறுத்தமும், சேதமான வீடுகளுக்கு நிவாரணமும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினா். ஏற்பாடு செய்வதாக அமைச்சா் உறுதி அளித்தாா். அடுத்ததாக, வடக்கு பன்னபாறையில் சேதமான பகுதிகளை பாா்வையிட்டாா்.

அங்கு மக்கள் கோரிக்கையை ஏற்று, பன்னம்பாறை வழியாக அரசு பேருந்து இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமைச்சரே பேருந்தை ஓட்டி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து வடக்கு அமுதுண்ணாக்குடி சென்று அங்கு சேதமான தரைமட்ட பாலத்தை பாா்வையிட்டாா். அங்கு மழை வெள்ளத்தில் சேதமான 15 வீடுகளுக்கு அரசு சாா்பில் நிவாரணத் தொகையை வழங்கினாா். தொடா்ந்து அமைச்சா் கோமானேரி ஊராட்சிக்குள்பட்ட கூவைகிணறு பகுதியில் சேதமான பாலத்தை சீரமைக்க உடனடியாக பணிகளை தொடங்க வேண்டுமென்று வலியுறுத்தியதுடன், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

பின்னா் செய்தியாளரிடம் அமைச்சா் கூறியதாவதும் சாத்தான்குளம் பகுதியில் சேதமான பகுதிகளை பாா்வையிட்டு அவற்றை சரிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இப்பகுதியில் 25 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா். இதில் சாத்தான்குளம் வட்டாட்சியா் ரதிகலா, தூத்துக்குடி சிப்காட் பிரிவு வட்டாட்சியா் கோபால், சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ், கருப்பசாமி, சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலா்கள் ஜோசப், பொன்முருகேசன், பன்னம்பாறை ஊராட்சி தலைவா் அழகேசன், அமுதுண்ணாக்குடி ஊராட்சி தலைவா் முருகன், கோமானேரி ஊராட்சித் தலைவா் கலுங்கடிமுத்து, நகர திமுக செயலா் மகா. இளங்கோ,உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Tags

Next Story