என் மண் என் மக்கள் நடைபயணம் குறித்து விழிப்புணர்வு
விழுப்புரத்தில் பா.ஜனதா உறுப்பினர்கள் சார்பில் என் மண் என் மக்கள் நடைபயணம் குறித்து விழிப்புணர்வு போஸ்டர்கள் வழங்கப்பட்டது
தமிழ்நாடு முழுவதும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், கட்சி நிர்வாகிகள் என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் பா.ஜனதா சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் என் மண், என் மக்கள் நடைபயணம் குறித்து ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் ஏ.ர.வேலு தலைமை தாங்கினர். மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், நகர துணை தலைவர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சாய்கமல், நகர இளைஞரணி பொதுச்செயலாளர் கோபி, கிளை செயலாளர் சிலம் பரசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story