புறம்போக்கு இடத்திலிருந்த மரங்கள் அத்துமீறி வெட்டி விற்பனை

புறம்போக்கு இடத்திலிருந்த மரங்கள் அத்துமீறி வெட்டி விற்பனை

எருக்கம்பட்டு கிராமத்தில் புறம்போக்கு இடத்தில் இருந்த மரங்களை வெட்டி விற்பனை செய்தது குறித்து ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எருக்கம்பட்டு கிராமத்தில் புறம்போக்கு இடத்தில் இருந்த மரங்களை வெட்டி விற்பனை செய்தது குறித்து ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் மெயின் ரோட்டில் அரசு பாதை புறம்போக்கு இடத்தில் 4 மரங்கள் இருந்தன. இந்நிலையில் 2 மரங்களை ஒரு கும்பல் வெட்டி 15 டன் எடையுள்ள மரத்துண்டுகளை 2 டிராக்டர்களில் எடுத்து சென்று செங்கல் சூளைக்கு ரூ.50 ஆயிரத்திற்கு விற்றது தெரியவந்தது. 3-வது மரத்தை வெட்டும் போது தகவலறிந்த கிராமமக்கள் சென்று தடுத்து நிறுத்தி, எருக்கம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அருண்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மரத்தை வெட்டிய நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் வேலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story