கன்னங்குறிச்சி மூக்கனேரி ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்பு

கன்னங்குறிச்சி மூக்கனேரி ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்பு

கன்னங்குறிச்சி மூக்கனேரி ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்பு

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள மூக்கனேரி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கன்னங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருமணிமுத்தாறு செல்லும் பிரதான வாய்க்காலாக ராஜவாய்க்கால் திகழ்கிறது. இந்த நிலையில் மூக்கனேரி பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து தற்காலிகமாக ராஜ வாய்க்காலில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு அகற்றி கழிவுநீர் செல்ல வழிவகை செய்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் போராட்டத்தை கைவிட்டு கடந்து சென்றனர் மேலும் ராஜ வாய்க்காலில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக சீர் செய்யப்பட வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு இல்லையெனில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக இப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story