பைபாஸ் சாலையில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம் - நெடுஞ்சாலை துறை
நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலையில், ஜெர்தலாவ் புறவழி பிரிவு சாலை முதல் 4 ரோடு மற்றும் தக்காளிமண்டி வரை சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து செயல்பட்டு வரும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புக்களை அகற்ற பலமுறை நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டும் இதுவரை ஆக்கிரமிப்புக்களை அகற்றி கொள்ளாததால் இன்று புறவழி பிரிவு சாலை முதல் தக்காளிமண்டி வரை உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்ற உள்ளதாக நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் நவீன் தெரிவித்துள்ளார்.
Next Story