மலையை ஆக்கிரமித்து கனிமவள கொள்ளை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மலையை ஆக்கிரமித்து கனிமவள கொள்ளை   - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கனிமவள கொள்ளை நடந்த பகுதியில் முற்றுகையிட்ட கிராம மக்கள் 

எடப்பாடி அருகே பக்கநாடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு மலை பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பாறைகற்களை வெட்டியெடுத்து விற்பனை செய்து வருவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் பக்கநாடு ஊராட்சியிலுள்ள அடுவாப்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான பொறம்போக்கு மலை பகுதி உள்ளது. இந்த பகுதியில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து அங்குள்ள பாறை கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்து வருவதாகவும் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு அரசுக்கு சொந்தமான பொறம்போக்கு மலைப்பகுதியிலுள்ள பாறைகளை வெட்டி எடுத்து விற்பனை செய்து வருவதை தடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story