விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சாலை ஆக்கிரமிப்பு
பொன்னேரிக்கரையில் காரை-சியட்டி கிராமத்தின் இடையே விவசாயி ஒருவர் சாலையின் வழியாக நிலத்திற்கு தினமும் தண்ணீர் பாய்ச்சுவதால் வீண் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொன்னேரிக்கரையில் காரை-சியட்டி கிராமத்தின் இடையே விவசாயி ஒருவர் சாலையின் வழியாக நிலத்திற்கு தினமும் தண்ணீர் பாய்ச்சுவதால் வீண் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, பொன்னேரிக்கரையில் இருந்து, பரந்துார் செல்லும் சாலையில், பல கிராமங்கள் உள்ளன. இச்சாலையில், காரை- - சியட்டி கிராமத்தின் இடையே, தனி நபர் ஒருவரது விவசாய நிலத்திற்கு, சாலையின் வழியாக தினமும் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. விவசாய கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக உறிஞ்சும் தண்ணீரை, சாலையின் மற்றொரு புறத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு, சாலை மீது சென்று நிலத்தில் அடையுமாறு பாசனத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும், அச்சாலை பகுதி விரைவில் பழுதடையும் என்பதால், சாலை ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்."
Next Story