தேர் செல்லும் பொது பாதை ஆக்கிரமிப்பு

பூசாரிப்பட்டியில் கோவில் தேர் செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மீட்டு தருமாறு கிராம மக்கள் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா பூசாரிப்பட்டி கிராமத்தில் நான்கு ஊர்களை சேர்ந்த பல்வேறு சமூகத்தினர் வழிபடும் ஸ்ரீ மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் உள்ளது. திருவிழா காலங்களில் திருத்தேர் வீதி உலா செல்லும் பொது பாதை உள்ளது. அந்த பொது பாதையை முத்துக்கருப்பன் என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டினார். தொடர்ந்து வட்டாட்சியர் நடத்திய விசாரணையில் முத்துக்கருப்பன் வீடு கட்டி வரும் இடம் நத்தம் புறம்போக்கில் உள்ளது என உறுதி செய்து அதை அகற்ற கூறினார். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பொது பாதையை மீட்டு தருமாறு கிராம மக்கள் சார்பாக மனு அளித்தனர்.

Tags

Next Story