ஏரியில் ஆக்கிரமிப்பு; பஞ்சாயத்து தலைவரின் கணவர் மீது புகார்

தொட்டியப்பட்டி ஏரியில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ள பஞ்சாயத்து தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் ஜமாபந்தியில் புகார் அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் தொட்டியப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தொட்டியப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுமார் 1 ஏக்கர் அளவிலான நிலத்தை முன்னாள் திமுக ஒன்றிய செயலாளரும், தொட்டியப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சத்தியமூர்த்தி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளார். குறிப்பாக, ஏரிக்கு செல்ல கூடிய மழைநீர் பாதையை ஆக்கிரமைப்பு செய்து வீடு கட்டியுள்ளார்.

இதனால் ஏரிக்கு செல்ல வேண்டிய நீர், ஏரிக்கு செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதால் வீடுகள் மூழ்கும் அபாயம் இருப்பதாக கூறி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியின் போது தொட்டியப்பட்டி பகுதி மக்கள் மற்றும் பாஜகவினர் இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு கொடுத்தனர். இதேபோல் அப்பகுதியில் பல்வேறு ஆக்கிரமிப்புகளும் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டியுள்ளதும் குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகி வழக்கறிஞர் தமிழ் நலன் பிரிவு பாஜக மாவட்ட தலைவர் வி.குமார், மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் பாஜக அருள், தமிழரசு உள்ளிட்ட பலர் மனு அளித்தனர்.

Tags

Next Story