ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தீவிரம்.....

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தீவிரம்.....

ஆக்கிரமிப்பு அகற்றம்

சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தீவிரம். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சியில் காமராஜர்புரம் காலனியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல போதிய வாறுகால் வசதிகள் இல்லை.

இதனால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. வாறுகால் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.அதனை தொடர்ந்து காமராஜர்புரம் காலனிக்கு வாறுகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வாறுகால் அமையும் பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு வாறுகால் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.இது குறித்து சிவகாசி எம்எல்ஏ அசோகனிடம் பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரடியாக மனு கொடுத்தார். அதனை தொடர்ந்து வாறுகால் அமையும் பகுதியில் 26 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டது.

அந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணிகள் நேற்று நடைபெற்றது. வாறுகால் அமைக்க இடையூராக இருந்த ஆக்கிரமிரமிப்பு கட்டிடங்கள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனால் ஊராட்சி நிர்வாகம் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.இதன் மூலம் அந்த பகுதியில் வாறுகால் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

Tags

Next Story