மூலனூர் சந்தையில் ஆற்றல் உணவகம்
ஆற்றல் உணவகம் திறப்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மூலனூர் வாரச்சந்தை வளாகத்திற்கு எதிரே ஆற்றல் உணவகம் திறக்கப்பட்டது. ஆற்றல்அசோக் குமார் முன்னிலையில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அவர்கள் உணவகத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவுகளை பரிமாறினார்.
இது குறித்து ஆற்றல் அறக்கட்டளை அறங்காவலர் அசோக்குமார் கூறியதாவது ஆற்றல் அறக்கட்டளை ஈரோடு,தாராபுரம், காங்கேயம், குமாரபாளையம் பகுதியில் ஆற்றல் உணவகம் தொடங்கப்பட்டு தரமான உணவுகள் காலை,மதியம், இரவு பரிமாறப்படுகிறது மாதத்திற்கு சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் பொதுமக்கள் இதில் பயன் பெற்று வருகின்றனர். இவற்றை விரிவுபடுத்தும் நோக்கில் தாராபுரம் மூலனூர் வாரச்சந்தை புதன்கிழமை தோறும் காலை முதல் மாலை வரை சந்தை செயல்படுகிறது.
காய்கறி பழங்கள் வாங்குவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான உணவு வழங்கும் நோக்கில் காலை இட்லி சட்னி சாம்பார் ரூபாய் 10 கட்டணத்திலும்,இதே போல் மதியம், சாப்பாடு, சாம்பார், பொரியல், மோர், ஊறுகாய் ரூபாய் 10 கட்டணத்தில் வழங்கப்படும்.
விரும்பியவருக்கு தேவைப்படும் அளவில் பரிமாறப்படும் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆற்றல் அறக்கட்டளை சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படைத் தேவைகள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு திருப்பூர் ஈரோடு நாமக்கல் மாவட்டம் மக்கள் ஆற்றல் சேவையை பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து எங்கள் சேவையை முழுமையாக செய்வோம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் . நிகழ்ச்சியில்.மூலனூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.செல்வக்குமார், மூலனூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜரத்தினம், மூலனூர் பேரூர் கழகச் செயலாளர் வெற்றிவேல், கன்னிவாடி பேரூர் கழகச் செயலாளர் லட்சுமணசாமி, தாராபுரம் நகரச் செயலாளர் C. ராஜேந்திரன், தாராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் G.பாலக்குமாரன், தாராபுரம் தெற்கு ஒன்றியம் ரமேஷ், தாராபுரம் கிழக்கு ஒன்றியம் செல்வக்குமார், குண்டடம் மேற்கு ஒன்றியம் செந்தில்குமார் மற்றும் சார்பு அணி செயலாளர் மற்றும் நிர்வாகிகள், நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், ரத்தத்தின் ரத்தங்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.