நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமல்: தீவிர வாகன சோதனை
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமல. தீவிரம் - மதுரை மாவட்டம் முழுவதிலும் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனை. நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினர் மற்றும் 3 நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோருடன் இணைந்து ஒவ்வொரு பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
வாகன தணிக்கையின்போது காவல்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும்படையினர் 49ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து வந்தால் உடனடியாக பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மேலும் 49ஆயிரத்திற்கு அதிகமான பணம் எடுத்துவந்தால் உரிய ஆவணங்களை காண்பித்து பின்பு பணத்தினைபெற்று செல்வதற்கான சிறப்பு குழுவானது அமைக்கப்பட்டிருக்கிறது.
தலா 8 மணி நேரத்திற்கு ஒரு முறை என பறக்கும் படையினர் சுழற்சி முறையில் பணியாற்றிவருகின்றனர் அதேபோன்று வாகனங்களில் அரசியல் கட்சி சார்ந்த கொடிகள் கட்டப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்பட்டுவருகிறது. சரக்கு வாகனங்களில் வாக்காளர்களுக்கு ஏதனும் பரிசுப்பொருட்கள் எடுத்துசெல்லப்படுகிறதா? எனவும் சோதனை நடத்திவருகின்றனர். காவல்துறை தரப்பில் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டு விதிகளை மீறி ஆவணங்கள் இன்றி பொருட்கள் எடுத்துவந்தால்,
பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன அதேபோன்று ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்கள் , சட்டமன்ற நாடாளுமன்ற அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
30 பறக்கும் படை வாகனங்களில் அதிநவீன சோலார் வசதியுடன் கூடிய 360 டிகிரி கோணத்தில் செயல்படகூடிய நிரந்தர கண்காணிப்பு கேமிராக்கள் வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ளன.