அமலாக்கத்துறை அதிகாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்

அமலாக்கத்துறை அதிகாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்

திண்டுக்கல் நீதிமன்றம் 

திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அன்ஹீட் திவாரியை கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்திருக்கிறது.பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி இருப்பதாக காவல்துறை குற்றம் சாட்டை முன்வைக்கிறது. மத்திய அரசு ஊழியரை கைது செய்ய மாநில காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. அரசு ஊழியர் கையும் களவுமாக பிடிபட்ட பின்னர் உடனடியாக மத்திய அரசின் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரிப்பது குறித்து மத்திய – மாநில காவல்துறை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். 15 மணி நேர விசாரணைக்கு பின் அங்கித் திவாரியை திண்டுக்கல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆஜர்படுத்தியது. லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரியை காவலில் எடுக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது.

Tags

Next Story