இன்ஜினியர் புதுமாப்பிளை விஷம் குடித்து தற்கொலை
தற்கொலை
திருமணமான 4 மாதத்தில் சோகம்
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆலங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரெஜித் (32). இன்ஜினியரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதி சேர்ந்த சோபியா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் சோபியா தாயார் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் தெரிகிறது. இதனால் மணமடைந்த நிலையில் காணப்பட்ட ரெஜித் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் காணப்பட்டார். உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மீட்டு சிகிச்சைக்காக அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணமான 4 மாதத்தில் புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story