பொறியாளர் தற்கொலை - போலீசார் விசாரணை

பொறியாளர் தற்கொலை - போலீசார் விசாரணை

பைல் படம் 

குமாரபாளையம் அருகே பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பச்சாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ரமேஷ்குமார், 23. இவர் பி.ஈ. பட்டப்படிப்பு முடித்து விட்டு, வெப்படை தனியார் மில்லில் டிசைனராக பணியாற்றி வந்தார். இவர் மன அழுத்தம் காரணமாக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். செவ்வாய் கிழமை காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, வந்தவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடிய போது, புதன் கிழமை காலை 08:00 மணியளவில் அருவங்காடு, மேட்டுக்கடை செல்லும் வழியில் இரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து, அவரை, கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது, அவர் இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story