விருதுநகரில் மூதாட்டியை பேனாவால் குத்தி கொன்ற பொறியியல் பட்டதாரி கைது

விருதுநகரில் மூதாட்டியை பேனாவால் குத்தி கொன்ற பொறியியல் பட்டதாரி கைது

கைது செய்யப்பட்ட வாலிபர்

விருதுநகரில் மூதாட்டியை பேனாவால் குத்தி கொலை செய்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் கடந்த 11ம் தேதி வீட்டில் தனியாக இருந்த வேலம்மாள் என்ற 71 வயது மூதாட்டியின் கண், கழுத்து, கன்னம் உள்ளிட்ட 14 இடங்களில் பேனாவால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு எஸ்.பி அப்துல்லா பெரோஸ்கான் தலைமையிலான போலீசார் ஆய்வு நடத்தி தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் இரு தனிப்படை அமைத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த போக்குவரத்து சார்பு ஆய்வாளர் யோக முருகனின் மகனான பொறியியல் பட்டதாரி ஜீவராஜன் 24, மூதட்டியை கொலை செய்தது உறுதியானது.

இதையடுத்து இன்று அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் ஜீவராஜனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை, திருமணமாகாத நிலையில் வேலைக்கு செல்லாமல் அதீத மது போதைக்கு அடிமையானதுடன் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கொலை நடந்த அன்று மது போதையில் ஏற்கனவே ஒரு இளம் பெண்ணிடம் உல்லாசமாக இருந்துவிட்டு அருகில் உள்ள பகுதிகளில் போதையில் நடந்து சென்றபோது வீட்டில் தனிமையாக இருந்த மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்தபோது மூதாட்டி கத்தியதால் பேனாக்களால் குத்திவிட்டு தப்பியதாகவும் இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவல்துறை அதிகாரியின் மகன் இது போன்ற மது போதைக்கு அடிமையாகி சைக்கோ கொலையாளியாக மாறிய விசாரணை நடத்திய காவல்துறையினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Tags

Read MoreRead Less
Next Story