ஆற்றில் மூழ்கி இன்ஜினியரிங் மாணவர் உயிரிழப்பு
சுபின் வர்கீஸ்
திருப்பூர் மாவட்டம் செங்கபள்ளியை அடுத்த மேலகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சிபு வர்கீஸ். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை பூர்வீகமாக கொண்ட இவருக்கு இரண்டு மகன்கள். இதில் இளைய மகனான சுபின் வர்கீஸ்(20) கோவையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பயின்றுவருகிறார். இந்நிலையில் விடுமுறையையொட்டி சிபு வர்கீஸ் குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மாத்தார் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து சொந்த ஊர் திரும்பயிருந்தநிலையில் திருவட்டார் அருகே அருவிக்கரையில் பரளியாற்றின் குறுக்கே அமைத்துள்ள தடுப்பணை பகுதியில் குடும்பத்தினருடன் குளிக்க சென்றுள்ளார் அப்போது இளைய மகன் சுபின் வர்கீஸ் ஆற்றில் ஆழமான பகுதியில் குளித்ததாக கூறபடுகிறது. இதில் எதிர்பாராத விதமாக தண்ணீர் மூழ்கிய சுபின் வர்கீஸை குடும்பத்தினர் மீட்க முயன்றுள்ளனர். எனினும் மீட்க முடியாமல் போகவே தீயணைப்பு துறையினருக்கு தகவலளித்தனர் இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் தீயணைப்பு துறையினர் போராடி தண்ணீரில் மூழ்கிய இளைஞர் சுபின் வர்கீஸை வெளியே கொண்டுவந்தனர். எனினும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த சுபின் வர்கீஸின் உடலை கைபற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்குவந்த பொறியியல் மாணவன் ஆற்றுநீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது