தகுதி அடிப்படையில் பொறியாளர்கள் பணி - கே.என்.நேரு

தகுதி அடிப்படையில் பொறியாளர்கள் பணி - கே.என்.நேரு

பொது உறுப்பினர்கள் கூட்டம் 

சங்ககிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு குறித்து சங்ககிரி,மேட்டூர், எடப்பாடி உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான உறுப்பினர்கள் பொது க்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாநாட்டின் பொறுப்பாளரும் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரமான கே.என் நேரு தலைமையில் நடைபெற்ற மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சங்ககிரி எடப்பாடி மேட்டூர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒன்றிய நகர செயலாளர்கள் சார்பில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

பொதுக்குழு கூட்டத்தில் தலைமை உரையாற்றிய மாநாட்டின் பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் இந்த மாநாடு சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பு நடைபெற உள்ளதாகவும் தொண்டர்கள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்காக சுமார் 160 ஏக்கர் நிலப்பரப்பு தயார் நிலையில் உள்ளதாகவும் வாகனங்களில் வருபவர்கள் வாகனங்களை சாலைகளின் ஓரத்தில் நிறுத்தாமல் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டதுடன் தற்போதைய திமுக ஆட்சியில் தகுதியின் அடிப்படையில் பொறியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம் செல்வகணபதி, சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் சம்பத்குமார், சுந்தரம், அவைத் தலைவர் தங்கமுத்து உள்ளிட்ட திமுக ஒன்றிய,நகர, பேரூர் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story