ஒகேனக்கல்லில் இன்ஜினியரின் தங்கச் சங்கிலி மாயம்
காவல் நிலையம்
ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த சாப்ட்வேர் இன்ஜினியரிங் இரண்டு பவுன் தங்க சங்கிலி மாயமானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சாத்தபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன், இவர் சென்னை தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம், நண்பர்களுடன் ஒகே னக்கல்லுக்கு சுற்றுலா வந்தார்.
அங்கு பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு, மெயின் அருவி அருகில் குளிக்க சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை சட்டை பாக்கெட்டில் வைத்து, அவரது நண்ப ரிடம் கொடுத்துவிட்டு சென்றார். குளித்து விட்டு வந்து பார்த்த போது செயின் காணவில்லை.
இது குறித்து சரவணன், ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story