மேட்டூர் அணையில் பாசிகளை கட்டுப்படுத்த திறனூட்டப்பட்ட கலவை தெளிப்பு
பாசிகளை கட்டுப்படுத்த கலவை தெளிப்பு.
மேட்டூர் அணையில் படர்ந்துள்ள பச்சை நிற பாசிகளை கட்டுப்படுத்த திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம்,மேட்டூர் அணையின் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் செல்லும் போது கரையோரத்தில் உள்ள விவசாயிகள் சோளம் ,கம்பு,ராகி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம். .இந்நிலையில் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர் மட்டம் உயரும் போது விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி விடுகின்றன இதனால் மூழ்கிய பயிர்களால் நொதிப்பு தன்மை ஏற்பட்டு தண்ணீரில் பாசிகள் படர்ந்து பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது.இதனை கட்டுப்படுத்த இன்று காலை மேட்டூர் அணையின் வலது கரை, இடதுகரை, 16 கண் மதகு பகுதியில் திறனூட்டப் பட்ட நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணியில் நீர் வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags
Next Story