நாங்குநேரி கோவிலில் எண்ணெய் காப்பு வைபவம்
நாங்குநேரி கோவிலில் எண்ணெய் காப்பு வைபவம்
தை அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம்,நாங்குநேரி பெருமாள் கோயிலில் நடைபெற்ற எண்ணெய் காப்பு அலங்காரத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தை மாத அமாவாசையையொட்டி நான்குநேரி அருள்மிகு வானமாமலை பெருமாள் கோயிலில் ஒரு கோட்டை எண்ணெய் காப்பு வைபவம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வானமாமலை பெருமாள் கோயில் தெப்ப உற்சவம், கிருஷ்ணன் கோயில் தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Next Story