செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு
கோப்பு படம்
அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலசீமியா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என எச்சரிக்கை வாசகம் இடம்பெறச் செய்ய வேண்டும் என மத்திய அரசின் விதி பின்பற்றப்படவில்லை எனவும், செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரியும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளின் முன்பும், தலசீமியா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தான் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்காணிக்கப் போகிறீர்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Next Story