கலவையில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை

கலவையில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை

கலவை மதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது .

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை மதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 2024 -2025 கல்வி ஆண்டிற்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் 101 விண்ணப்பங்கள் வரப்பெற்றது. இதில் குலுக்கல் முறையில் 36 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த இட ஒதுக்கீட்டில் மாணவர் தேர்வு கலவை தாசில்தார் ஜெயபிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஸ்வரன், பள்ளியின் முதல்வர் சுகுணா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Tags

Next Story