செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் நுழைவு கட்டணம்: கவுன்சிலர்கள் எதிர்ப்பு

செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அதிமுக, பாஜக கவுன்சிலா்கள் நேற்று நகராட்சி மேலாளா் கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, செங்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான முத்துசாமி பூங்காவிற்கு வரும் பொதுமக்களிடமிருந்து நுழைவு கட்டணம் தொகை வசூலிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாகவும்,

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 தினங்களுக்குள் ஆட்சேபணை முரண்பாடுகள் இருந்தால் ஆணையாளா் செங்கோட்டை நகராட்சியில் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் தெரிவிக் கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானமானது பெரும்பான்மையான உறுப்பினா்களால் ஆரம்ப கட்ட நிலைலேயே நிராகரிக்கப்பட்ட தீரமானம் ஆகும்.

அவ்வாறு நிராகரிக்க்ப்பட்ட தீர்மானத் தினை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என பொய்யாக நாளிதழில் செய்தி வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டத்திற்குரியது ஆகும். இதற்கு எங்களது கண்டனத்தினை மிக கடுமையாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பூங்காவில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருவாயை விட அதிகமான அளவு வணிக வளாகங்களின் மூலம் பெறலாம். பொதுமக்களிடம் ரூ. 5 வசூலிப்பது பொதுமக்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்கு வது போன்ற செயலாகும்.

எனவே மேற்படி பூங்காவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க இருக்கும் திட்டத்தினை உடனடியாக கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டிருந்தது.

Tags

Next Story