இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தொழில் முனைவோர் கருத்தரங்கு !!

இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தொழில் முனைவோர் கருத்தரங்கு !!

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தொழில் முனைவோர் கருத்தரங்கு நடைபெற்றது.

ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக் கும் மாணவ- மாணவிகள் எதிர்காலத்தில் தொழில் முனைவோர்களாக உருவாகும் வகையில் தொழில் முனைவோர் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் கடந்த 2 நாட்கள் நடந்தது. நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி ஆறுமுகம் தலைமை தாங்கினார். பெருந்துறை டி.எம்.டபிளியோ நிறுவ னத்தின் இயக்குனர் கே.பி.ரவிச்சந்திர் கருத்தரங்கில் பங்கேற்று ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

செயல் திறன் மேம்படுத்துதல், தொழிலில் நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிநவீன தொழில் நுட்பத்தின் பங்கு உள்ளிட்டவை குறித்து குன்னூரை சேர்ந்த ராதிகா மீனாட்சி ஷங்கர் பேசினார். பேராசிரியர் பி.வெங் கடாச்சலம் காணொலி காட்சி மூலம் பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்து பேசினார்.

முன்னதாக கல்லூரி முதல்வர் ஜி.மோகன்குமார் வரவேற்றார். முடிவில் கல்லூரியின் தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர் சி.அல்லிமுத்து நன்றி கூறினார்.

2 நாட்கள் கருத்தரங்கை மாணவ- மாணவிகளுக்கு பயன் உள்ள முறையில் நடத்திய தொழில் முனைவோர் மைய ஒருங்கி ணைப்பாளர்களை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண் முகன், செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவ னங்களின் செயலாளர் எஸ்.திருமூர்த்தி, நந்தா தொழில் நுட்ப வளாக நிர்வாக அதிகாரி ஏ.கே.வேலுசாமி ஆகியோர் பாராட்டினர்.

Tags

Next Story