வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் - பக்தர்கள் கொதிப்பு
வாகன நுழைவு கட்டண ரசீது
பழனியில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிப்பதால் பக்தர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவு வருகிறார்கள். ஊருக்குள் ஆயிரம் வண்டிகள் வந்துட்டு போகலாம். ஆனால் கோவிலுக்கு வந்தா மட்டும் நுழைவுக் கட்டணம் தரவேண்டும். வேறு பெயரில் சொல்வதானால் நுழைவு வரி என்று அழைக்கலாம். வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த நிழல் கிடையாது. திருட்டு போகாது என உத்திரவாதம் கிடையாது. சுகாதரமான வீதிகள் கிடையாது. அப்பறம் எதற்கு நுழைவுக்கட்டணம் என பக்தர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். கோவிலுக்கு சாமி கும்பிட வந்தா மட்டும் வரி கட்டணுமா..இது வரியா...அபராதமா.. என பக்தர்கள் மனம் வாடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story