தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் சுற்றுச் சூழல் தினவிழா

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் சுற்றுச் சூழல் தினவிழா

சுற்றுச்சூழல் தினம் 

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடுவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு தேசிய பசுமைப்படை மற்றும் தூத்துக்குடி ஆல் கேன் டிரஸ்ட் சார்பாக மரம் நடு விழா நடைபெற்றது.நிகழ்வில் பள்ளி தாளாளர் வழக்கறிஞர் ஸ்டேன்லி வேதமாணிக்கம் தலைமை வகித்து வரவேற்று பேசினார்.

பள்ளியின் முன்னாள் மாணவரும் ஆல் கேன் டிரஸ்ட் தலைவருமான வழக்கறிஞர் மோகன்தாஸ் மரக்கன்றுகளை நட்டு வைத்து சுற்றுச் சூழல் தின சிறப்பினை பற்றி எடுத்துரைத்தார்.

நிகழ்வில் புங்கை, வேம்பு போன்ற மரங்களும், பப்பாளி, கொய்யா, பலா, எலுமிச்சை போன்ற பழ வகை மரக்கன்றுகளும் நடப்பட்டன. விழாவில் ஆல் கேன் டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள்,அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story