சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கும்பகோணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதனால் ஏற்படும் புற்றுநோயை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சார சைக்கிள் பேரணி நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் தேதி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதனால் ஏற்படும் புற்றுநோய் தவிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சார சைக்கிள் பேரணியில் திருவாரூர் தொடங்கி கும்பகோணத்தில் 12 வில்வித்தை கராத்தே மாணவர்கள் 45 KM தூரத்தை நிறைவு செய்தனர். இப்பேரணி நிகழ்வை திருவாரூர் நகர மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் விழாவிற்கு தலைமை வகித்தார், துணைக் காவல் கண்காணிப்பாளர் திருவாரூர் உட்கோட்டம் P. மணிகண்டன் இந்நிகழ்ச்சியை வாழ்த்துரை வழங்கி கொடி அசைத்து பேரணியை துவங்கி வைத்தார்,

முன்னிலை தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் R.ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள், N.நெல்சன் மாவட்ட வளமை தலைமை அலுவலர் S. ஞானசேகரன் மாவட்ட ஆளுனர், அசோசியேஷன் ஆஃப் அலையன்ஸ் G. வரதராஜன் பொதுச் செயலாளர் தமிழக இயற்கை உழவர் இயக்கம் S.கலியபெருமாள் நகர மன்ற உறுப்பினர்.ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை ஒளிரவன் ஃபவுண்டேஷன் தலைவர் , இரா. குணசேகரன் செய்திருந்தார் வரவேற்று விழிப்புணர்வு உறுதி மொழியை வாசித்து அனைவராலும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பயணம் தொடங்கியது.

மரக்கன்று வழங்கியும் மரக்கன்று நட்டு நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும் நம் மரம் வளர்ப்போம் என்று உறுதிமொழி பொதுமக்களிடம் வாங்கிக் கொண்டு வழங்கினார்கள், சிவபாலாஜி 7 வயது என்கின்ற கராத்தே மாணவன் காலை 7 மணிக்கு நிகழ்வில் பங்கு கொண்டு 35 km தூரத்தை தொடர் பயணத்தை மேற்கொண்டு எல்லாருடைய கவனத்தையும் அவர் வசம்படுத்தினார. கும்பகோணம் காந்தி பூங்காவில் 45 KM தூரத்தை நிறைவு செய்த மாணவர்களை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார், பேரணியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மதிய உணவு அவர் இல்லத்தில் வழங்கப்பட்டது அதுபோல் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் மற்றும் மாலதி முத்துவேல் ஆகியோர் மாணவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story