சேலம் மாணவர்களுக்கு மதுரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அங்குள்ள ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். சுற்றுலா நிறைவில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டபடி மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கி பேசினார்.
நம் வாழ்நாளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மரங்களை நாம் நட வேண்டும். குறைந்த பட்சம் மாணவ மாணவிகள் தங்கள் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு மரம் நடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் மரங்கள் வளர்ப்பதால் இயற்கைக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பாதாகைகள் வழங்கி சுற்றுச்சூழல் உறுதிமொழி வாசிக்க மாணவ மாணவிகள் பின் தொடர்ந்து வாசித்தனர். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ரமேஷ்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்