பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

குலசேகரத்தில் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.இதில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவி களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது. இதே போன்று எல்.கே.ஜி குழந்தைகளுக்கு போட்டி கள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்ந்து மாணவ மாணவியர் கலந்து கொண்ட விழிப்புணர்வுபேரணி நடைபெற்றது. பேரணியின் போது மாணவ மாணவிகள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வாசகங் களை முழங்கி கையில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குனர் சுதாதேவி, எஸ் ஆர்கே சிபி எஸ்இ பள்ளி முதல்வர் லதா தேவி, எஸ் ஆர் கேபிவி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி முதல்வர் முனைவர் டைட்டஸ் ஆண்டனி, துணை முதல்வர் பிளஸ்சி தாமஸ் மற் றும் ஒருங்கிணைப்பாளர் உஷா குமாரி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் காய்கறி தோட்டம் ஒன்றும் மாணவர்களை கொண்டு அமைக்கப்பட் டது. இதற்கான ஏற்பாடு களை பள்ளியின் நிர்வாகம் செய்திருந்தது.

Tags

Next Story