சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

மாநில அளவிலான சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியை ‘மீண்டும் மஞ்சப்பை’ என்பதை மையமாக கொண்டு விழிப்புணர்வு பயிற்சியில் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி ஆகியவை இணைந்து மாநில அளவிலான சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியை ‘மீண்டும் மஞ்சப்பை’ என்பதை மையமாக கொண்டு 3 நாட்கள் குற்றாலத்தில் நடத்தியது. பயிற்சியில் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றனர்.

இதுகுறித்து துறையின் டீன் செந்தில்குமார் கூறுகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட மாநில அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி பட்டறையில் எங்கள் துறை மாணவ- மாணவிகள் 2 பேர் பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் இருந்து சுமார் 30 நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் எங்கள் கல்லூரியில் இருந்து 2 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது என்றார்.

Tags

Next Story