இபிஎஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்

இபிஎஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்

இபிஎஸ் பிறந்த நாள் விழா 

குடியாத்தத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

வேலூர் மாவட்டம் ,குடியாத்தம், குடியாத்தம் அதிமுக நகர கழகத்தின் சார்பில் நகரக் கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமையில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சிதலைவரும்,அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி 70வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் ராமு கலந்து கொண்டார்.எடப்பாடியின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் மற்றும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில் அதிமுகவைச் சேர்ந்த புறநகர் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் மூர்த்தி, ஒன்றியசெயலாளர் சிவா, அவைத் தலைவர் அன்பு, துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகம் கலந்து கொண்டனர்.

Tags

Next Story