தியாகிகளின் நினைவு தூணில் இபிஎஸ் மலர் தூவி மரியாதை
ஆத்தூர் அருகே 1972ல் விவசாயிகளின் உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவு வீரக்கல் தூணில் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் கைகால் அளவு திட்டத்தை கொண்டு வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த பாராட்டு விழாவிற்கு வருகை புரிந்த எடப்பாடி பழனிச்சாமி, பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையப் பகுதியில் 1972ல் விவசாயிகளின் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளின் வீரக்கல் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சில புறநகர் மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன்m ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
Next Story