சமத்துவ நாள் உறுதிமொழி
சமத்துவ உறுதிமொழி ஏற்பு
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் அன்று நாடுமுழுவதும் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பிரமணியம் முன்னிலையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் இன்று (12.04.2024) சமத்துவ நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.
நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்ச்சியல் உதவி ஆட்சியர் பயிற்சி ரஜத் பீட்டன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கு.சுகிதா, உதவி தேர்தல் அலுவலர்கள் கனகராஜ், லொரைட்டா, சுப்புலெட்சுமி, தனி வட்டாட்சியர் கண்ணன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.