விழுப்புரத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

விழுப்புரத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு 

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதாவது, சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்து வத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துத்தந்த அம்பேத்கரின் பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லா சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடை பிடிப்பேன் என்றும் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) செல்வமூர்த்தி, அலுவலக மேலாளர் (குற்றவியல்) சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story