காங்கிரஸ் கட்சி சார்பில் சமத்துவ இப்தார் நோன்பு நிகழ்ச்சி
இப்தார் நோன்பு
நாகூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த சமத்துவ இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநில பொறுப்பாளர் அறிவழகன் பங்கேற்றார்.
ரமலான் பண்டிகையை கொண்டாட தயாராகும் இஸ்லாமியர்கள் தினமும் நோன்பு நோற்று இறைவனுக்கு தங்களுடைய பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டம் நாகூரில் சமத்துவ இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநில பொறுப்பாளர் அறிவழகன் மற்றும் திமுக, விசிக, மமக மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர். சரியாக 6.29 மணிக்கு பிரார்த்தனை செய்து அனைவரும் நோன்பு திறந்தனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமியர்களோடு அமர்ந்து அனைத்து மதத்தினரும் நோன்பு திறந்தனர். நிகழ்வில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவும், நாட்டில் அமைதி நிலவவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
Next Story