ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவப் பொங்கல்

ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளியில் சமத்துவப் பொங்கல்

சமத்துவ பொங்கல் 

பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மும்மத ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் சமத்துவப் பொங்கல் விழா நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவில் இந்து, முஸ்லிம்,கிறிஸ்டின் என மூவின மக்கள் ஒன்றிணைந்து சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, கலை, பண்பாட்டை பேணிக்காக்கும் வண்ணம் பொங்கலோ பொங்கல் என ஒற்றுமைப் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.விழாவில் குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கவிதா, கல்யாணி, பள்ளித் தலைமையாசிரியர் அல்போன்ஸா, உதவி ஆசிரியர்கள் விஜயசுதா, அன்னான் ஜெயநிர்மலா, முத்துக்கனி, அமுதா, பாலசுப்பிரமணி,வார்டு கவுன்சிலர் ராஜா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சீதா,பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்,பெற்றோர்கள், பள்ளிக்குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.

அதேபோன்று வட்டார வள மைய வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்தப்பயிற்சி மையத்தில் நடைபெற்ற ஒற்றுமைப்பொங்கல் விழா மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் தலைமையில் வட்டார கல்வி அலுவலர்கள் இராமதிலகம், இலாஹிஜான்,வட்டார மேற்பார்வையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பராமரிப்பாளர்கள் பொன்னம்மா, அம்சவள்ளி,அலுவலகப்பணியாளர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story