சமத்துவ பொங்கல் விழா

திருப்பூரில், நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

திருப்பூரில் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாணவர்கள் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். பொங்கல் விழா இன்னும் இரண்டு தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளைய தினம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்பதால் இன்றைய தினமே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் வழிகாட்டுதலின் பேரில் பள்ளி மாணவர்கள் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். பாரம்பரிய முறைப்படி விறகு மூட்டி பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கூச்சலிட்டு பொங்கல் வைத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து பவளக்கொடி கும்மி குழுவினரின் சார்பில் கடந்த 15 நாட்களாக கும்மி நடனம் பயிற்சி பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று பவளக்கொடி கும்மி குழுவினருடன் இணைந்து பள்ளி வளாகத்தில் கும்மி ஆடி அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பல்வேறு தமிழர்கள் பாரம்பரிய கலை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையின் மரபு மாறி வரக்கூடிய சூழ்நிலையில் பொங்கல் பண்டிகையின் மகத்துவத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருவதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி தெரிவித்தார்.

Tags

Next Story