சமத்துவ பொங்கல் விழா

ராசிபுரம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள் , பானை உடைத்தல். கயிறு இழுத்தல் போட்டி , இசை நாற்காழி, போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் பண்டிகையில் ஆணையாளர் (பொ) இரா . சேகர் அவர்கள் முன்னிலையில், நகர் மன்ற தலைவர் முனைவர் திருமதி இரா.கவிதா சங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து அனைவரும் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் ஜல்லிக்கட்டு மாடு வரவழைத்து அதற்கு பூஜைகள் செய்து பொங்கல் பழம் ஆகியவை அனைவரும் வழங்கினர். இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள் விநாயகமூர்த்தி, பிரபு, சரவணன், சண்முகம் செல்வம்,பழனிச்சாமி, நிர்மலா கேசவன், லலிதா பாலு, தமிழரசி, ஜெயம்மாள், நகராட்சி பொறியாளர் சாந்தி வடிவேல், பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி, நகராட்சி மேலாளர் ராமச்சந்திரன், நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் முருகேசன், துப்புரவு அலுவலர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர் சிவா, துப்புரவு மேற்பார்வையாளர்கள் ராஜேந்திரன், பன்னீர்செல்வம், சுப்பிரமணி, முத்தமிழ், சுப்ரமணி, அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை/ஒப்பந்த பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story